சிவா கார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் சாய் பல்லவி!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-29

Views 3K

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இதையடுத்து சிவா ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறார். ரவிக்குமார், சிவா இணையும் படத்தின் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங். ரவிக்குமார் படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவா. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது. சாய் பல்லவி சூர்யாவின் என்.ஜி.கே. மற்றும் தனுஷின் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா தான் சாய் பல்லவிக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிக்குமார் சிவகார்த்திகேயன் சேர்ந்து பணியாற்றும் காமெடி படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதனால் சிவா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Buzz is that makers of Sivakarthikeyan's upcoming comedy movie with director Rajesh are planning to have Sai Pallavi as the leading lady.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS