பாலிவுட்டில் தனக்கு நடந்த துரதிருஷ்டத்தை பற்றி ஸ்ரீதேவி!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-30

Views 1

பாலிவுட்டில் தனக்கு நடந்த துரதிர்ஷ்டம் பற்றி ஸ்ரீதேவி ஒரு முறை பேட்டியில் தெரிவித்து வருத்தப்பட்டார். தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆனவர் ஸ்ரீதேவி. துபாய்க்கு சென்ற இடத்தில் மரணம் அடைந்தார். அவரின் மூத்த மகள் நடிகையாகியுள்ளார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவி கூறியிருந்ததாவது, என்னை கவர்ச்சி புயலாக மக்கள் பார்ப்பது பிடிக்கவில்லை. யாராவது என்னிடம் வந்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றால் நான் ரியாக்ட் செய்ய மாட்டேன். அதுவே நன்றாக நடிக்கிறீர்கள் என்றால் பெருமைப்படுவேன். தமிழ் படங்களில் நான் இயற்கையாக நடிப்பதை விரும்புகிறார்கள். ஆனால் இந்தி படங்களில் கிளாமர், மசாலாவை எதிர்பார்க்கிறார்கள். என் துரதிர்ஷ்டம் எனக்கு இந்தியில் ஹிட்டான முதல் படம் கமர்ஷியல் படம்(ஹிம்மத்வாலா). நான் வாழ்க்கை முழுவதும் நம்பர் ஒன்னாக இருக்க முடியாது. அதுவும் நடிகையின் காலம் மிகவும் குறுகியது. என்னை விட இளமையான ஒருவர் என் இடத்தை பிடித்த உடன் நான் நடிப்பதை நிறுத்திவிடுவேன். உண்மையில் நான் ரொம்பவே சிம்பிள். நான் ஒரு சாதாரண ஆள். சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. மற்ற சாதாரண பெண்களுக்கு கூட ஸ்டைல் இருக்கும். ஆனால் எனக்கு அதுவும் இல்லை என்றார் ஸ்ரீதேவி.


Bollywood actress Sridevi once said in an interview that she was not happy with the sexy siren tag. She added,'In Tamil films they love to see me act naturally. But in Hindi films all they want is lot of glamour, richness and masala. My bad luck was that my first big hit in Hindi films turned out to be a commercial one (Himmatwala).'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS