காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற கெடு முடிவடையும் நேரத்தில், நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மனு செய்வது எல்லாம் மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மதுரையில் நடந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
Central Government is playing Drama on Cauvery says Stalin. He also added that All of 50 MPs in ADMK Camp should resigned to Pressure the Central Government.