காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

Oneindia Tamil 2018-04-02

Views 2.8K

காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது. இதனால் நாளை மருந்துக்கடைகளும் இயங்காது என்று கூறப்பட்டு இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகம் முழுக்க மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அங்காங்கே போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது காவிரி பிரச்சனைக்காக நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 300 இணைப்பு சங்கங்கள் கடையடைப்பில் பங்கேற்க உள்ளது.

Strike in the state of Tamil Nadu tomorrow for Cauvery issue. Due to the strike, the medics will also not work in the state.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS