காவிரி மேலாண்மை அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் நடிகர் சங்கம் சார்பில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி 'ஸ்டெர்லைட் ஆலை'யை மூட வலியுறுத்தியும் மற்றும் 'காவிரி மேலாண்மை வாரியம்' மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
TN farmers are in the struggle to set up Cauvery Management Board. In this case, Artiste association has announced that the strike will be held near Valluvar Kottam on April 8 to insisting to set up CMB.