பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பச்சை என்பது விவசாயத்தை குறிப்பதற்காக என்று அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கத்தை அளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் 12- ஆம் தேதி ராணுவ தளவாடப் பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.