க்யூபுக்கு செக் வைக்கும் பக்கா பிளான்!- வீடியோ

Filmibeat Tamil 2018-04-10

Views 8.2K

சினிமா ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுவரும் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவில் இருக்கிறது. தமிழக அரசு சார்பாக தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதற்கிடையே, பல தியேட்டர்களுக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கும் க்யூப் நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்காக சிறிய டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்குவோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வருகிறது. முதலில், ஏரோக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தயாரிப்பாளர்கள் சங்கம் அடுத்ததாக மைக்ரோஃப்ளக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மைக்ரோஃப்ளக்ஸ் நிறுவனத்திற்கு, தயாரிப்பாளர் சங்கம் சொந்தமாக மாஸ்டரிங் செய்த பிரதியை வழங்கும். மைக்ரோஃப்ளக்ஸ் நிறுவனத்தின் மூலம் சில திரையரங்குகளுக்கு 2K, 4K ப்ரொஜெக்டர்கள் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்னும் சில சிறிய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். எனவே, மேலும் சில நிறுவனங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்யூப் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதற்கான காரியங்களை அடுத்தடுத்து செய்து வருகிறது விஷால் அன் கோ. இன்னும் சில நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் விரைவில் ஸ்ட்ரைக்கிற்கு தீர்வு ஏற்படும்.

TFPC is planning to end the Qube company's dominance. It is being signed with small digital service providers. Producers council signed the agreement with Aerox, is next contracted with Microflex.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS