காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சணையான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பத்தூரில் திருநங்கைகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அன்புகோமதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
des : More than 100 transgender demonstrations were insisted on setting up Cauvery Management Board.