காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வந்த மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. மோடி வருகைக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது என்றும், அதை செயல்படுத்த வேண்டிய கடமை பிரதமருக்கு உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.