ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேசன் எதிரில் நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம்.
கைது,பரபரப்பு.
தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி சற்று முன் ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேசன் எதிரில் நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி போலிசாரால் கைது செய்யப்பட்டார்.ஒரு சில தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள ஸ்ரீ ரெட்டி, சில காலமாக தெலுங்கு திரைப்பட ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்து வருகிறார். தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை,பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கதா நாயகர்கள் தயாரிப்பாளர்களுக்க்காக புரோக்கர்களாக செயல்படுகின்றனர்.தெலுங்கு நடிகைகளில் 90 சதவிகிதம் பேர் பல்வேறு தொல்லைகளை சந்திக்கி்ன்றனர்.இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்பதால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கி்ன்றனர்.மேலும் எனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் உறுப்பினருக்கான அடையாள அட்டையை கூட கொடுக்க மறுக்கின்றனர் என்று கூறிவந்தார்.இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீ ரெட்டி,அதிரடியாக மேலாடையை கழற்றி சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, ஒருபெண் ஆகிய நான் இது போன்ற போராட்டத்தில் ஈடுபட மூவி ஆர்ட்டி அசோசியேசனே காரணம் என்று குற்றம் சாட்டினார்.இந்த நிலையில் அவரை ஜூப்ளிஹில்ஸ் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.