சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ரசாயன தாக்குதல் நடத்தப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதிபர் ட்ரம்ப் எச்சரித்தபடி சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படை வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை அரசு ராணுவத்தைக் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவிப் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
US joint force strikes syria at least six loud explosions were heard in Damascus on Saturday and smoke was seen rising over the Syrian capital, a Reuters witness said.