கார்த்திக் சுப்புராஜ் இயக்கி, தயாரித்த 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகம் தவிர பிற பகுதிகளில் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஸ்ட்ரைக் காரணமாக இங்கு மட்டும் திரையிடப்படவில்லை. இது தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "மெர்க்குரி படம் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. என் மண்ணான தமிழகம் தவிர பிற இடங்களில் மட்டும் வெளியாகியிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
மெர்க்குரி படத்தை மற்ற இடங்களில் இன்று வெளியிடும் கட்டாயத்தில் இருந்தோம். அதனால் என் மண்ணைத் தவிர மற்ற இடங்களில் மெர்குரி ரிலீஸ் ஆகியுள்ளது. என் மண்ணில் என் படத்தை வெளியிட தகுந்த சூழ்நிலை அமையாதது மிகுந்த வருத்தத்தை அளித்துவருகிறது.
'Mercury' directed and produced by Karthik Subbaraj is released except TN due to Cinema Strike. Karthik Subbaraj issued a statement on this. Karthik subbaraj apologized for not releasing the film in Tamil.
#Mercury #Karthicksubburaj #Prabhudeva