கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் இரண்டிலும் கிறிஸ்துவர்கள் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
The Bharatiya Janata Party (BJP) on Monday released its first and second list of BJP candidates. No Muslim or Christian has given chance in the list.