டிஜிட்டல் சேவை கட்டணத்தை எதிர்த்து, தமிழ் திரையுலகத்தினர் கடந்த, 47 நாட்களாக நடத்தி வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தப் போராட்டத்தில் தமிழ் திரையுலகம் இணைந்தது. அதனால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. திரைப்படம் தொடர்பான டப்பிங், எடிட்டிங் என எந்த பணியும் நடக்காமல் இருந்தது.
Tamil cinema strike withdrawn after 47 days. Cinema production to resume very soon.