கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் திரையுலகினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். க்யூப், யு.எஃப்.ஓ டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணம் உயர்வுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம் முடிவுக்கு வர இருக்கிறது.
பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கி நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ட்ரைக் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதையைப் பார்ப்போமா?
க்யூப், யு.எஃப்.ஓ கட்டண உயர்வுக்கு எதிராக தெலுங்கு திரையுலகம் சார்பில் மலையாளம், கன்னடம், தமிழ் திரையுலகத் தயாரிப்பாளர்களுக்கு ஸ்ட்ரைக் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, தெலுங்கு சினிமா முன்னெடுக்கும் இந்த ஸ்ட்ரைக்கில் கலந்துகொள்வதாக தென்னிந்திய திரையுலகினர் தியேட்டர்களில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான கியூப், யுஎஃப்ஓ கட்டணத்தை குறைக்கக் வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் ஸ்ட்ரைக் அறிவித்தினர். மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்தியாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டது.
மார்ச் 1 முதல் சினிமா ஸ்ட்ரைக் நடைபெறத் திரையுலகினருக்கும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிஜிட்டல் நிறுவனங்கள் 20 சதவீத கட்டணக் குறைப்புக்கு சம்மதித்ததால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. 25 கட்டண குறைப்பு வலியுறுத்தி தமிழகத்தில் ஸ்ட்ரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
தியேட்டர்களும் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், "சென்னையில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் வழக்கம்போல் இயங்கும். நாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை" எனத் தெரிவித்தார்.
சென்னையில் நடக்கும் படங்களின் ஷூட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறாது எனவும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் ஷூட்டிங் வேலைகள் மார்ச் 23- ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது. சிறப்பு அனுமதியில் விஜய் படம் உள்ளிட்ட சில படங்களின் தமிழகத்தில் சென்னை தவிர பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்துப் பேசி தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிம்பு, "நடிகர்களுக்கும் அவர்களது படங்களின் வசூல் உண்மை நிலவரம் தெரிய வேண்டும். அதை தியேட்டர்கள் முறையாகத் தெரிவிக்க வேண்டும். அதைப் பொறுத்து நடிகர்கள் அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள்" என பேசினார். இந்தக் கருத்து அனைவராலும் ஆமோதிக்கப்பட்டது.
ஏப்ரல் 4ம் தேதி திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி நடைபெறும் என அறிவித்தனர். பேரணியாகச் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்போம் எனத் தெரிவித்தார் விஷால்.
திரையுலகினரின் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தமிழகம் முழுக்க வலுத்ததால் பேரணி முடிவு கைவிடப்பட்டது. அன்று பேரணி நடைபெறவில்லை.
கார்த்திக் சுப்புராஜ் 'மெர்க்குரி' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகக் கூறியதுச் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு, கடும் எதிர்ப்பு எழுந்ததால் ஸ்ட்ரைக் நிறைவடையும் வரை படத்தை வெளி