ஜெயலலிதா உதவியால் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து தங்க பதக்கம் வென்றேன் விமான நிலையத்தில் வீரர் அமுல்ராஜ் பேட்டி.
காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீரர் அமுல்ராஜ் தொடர்ந்து 3வது முறையாக தங்கம் வென்றார்
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அமுல்ராஜுக்கு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை அணிவித்து பூச்செண்டு தந்து வரவேற்றனர். பின்னர் நிருபர்களிடம் அமுல்ராஜ் கூறுகையில், காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டியில் நான் தொடர்ந்து 3வது முறையாக தங்கம் வெண்று உள்ளேன். நான் இந்த வெற்றியை பெற உதவி ஜெயலலிதா அம்மாவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் தந்த ஆதரவும் ஊளக்கமும் தான் என்னை வெற்றி பெற செய்தது. மத்திய, மாநில அரசுகள் உதவிகளை செய்கின்றன.