இந்த ஐபிஎல் சீசனில் கிட்டத்தட்ட பெரும்பாலான அணிகளுக்கு புதிய கேப்டன்கள் கிடைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுடைய கேப்டன்சி திறமையை நிரூபித்து வருகின்றனர். அதில், கேப்டன் கூல் டோணியின் பாணியில், பதற்றப்படாமல் அமைதியாக செயல்பட்டு வருகிறார் கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக். கொஞ்சம் கொஞ்சமாக அவர் டோணியாகவே மாறி வருகிறார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் பெரும்பாலான அணிகளுக்கு புதிய கேப்டன்கள் கிடைத்துள்ளனர். கொல்கத்தாவுக்கு தமிழரான தினேஷ் கார்த்திக், பஞ்சாபுக்கு மற்றொரு தமிழரான அஸ்வின் கேப்டனாக உள்ளனர். கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ள கவுதம் கம்பீர் அதன் கேப்டனாக உள்ளார். ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன், ராஜஸ்தானுக்கு அஜிங்யா ரஹானே கேப்டன்களாக உள்ளனர்.
Dinesh karthick becoming Dhoni slowly. stuns with dhoni style stumping