தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் அதிரடி நடவடிக்கைகளால் தமிழ் சினிமாவில் சில விரும்பத்தகுந்த மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. தொடர்ந்து ஒன்றரை மாதம் ஸ்ட்ரைக் நடத்தி, தீர்வு ஏற்பட்டால்தான் இந்தப் பிரச்னையை விட்டு நகருவேன் என திடமாக நின்று தற்போது உடன்பாடு எட்டப்பட காரணமாகி இருக்கிறார். அவரது நடவடிக்கைகளையும், அதிரடி பேச்சுகளையும் முன்பு விமர்சித்த பலரும் கூட தற்போது நடைபெற்ற முயற்சிகளுக்காகவும், மாற்றங்களுக்காகவும் விஷாலைப் பாராட்டி வருகின்றனர். விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றில் இந்த 48 நாள் ஸ்ட்ரைக்கும், அதில் எட்டப்பட்டிருக்கும் முடிவுகளும் திரையுலகில் மிக முக்கியமான செயல்பாடுகள். இதன் மூலம், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நிறைய நன்மைகள் ஏற்படவிருக்கின்றன. நடிகர் சங்கத்தின் கடனை அடைத்த விஜயகாந்த் சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுகிறார். தற்போது, விஷால் மேற்கொண்ட பணிகள் அவரையும் சிறந்த நிர்வாகியாக உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்தால் விஷாலின் சாதனைகளில் இவை மிக முக்கியமானதாக இருக்கும்.
Vishal's action by the Producers council has made some interesting changes in Tamil cinema. Vishal has been appreciated by kollywood tamil cinema actors, producers, directors and other celebrities. The strike is finally coming to an end!