குடிபோதையில் பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை தந்தையே கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்மணி ராஜன் இவரது மனைவி ஜமுனாராணி இவர்களுக்கு 4 வயதில் ஹகின் என்ற மகனும், 2 வயதில் சஞ்சனா என்ற மகளும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கண்மணிராஜனுக்கும் ஜமுனாராணிக்குமிடையே குடும்ப பிரச்சினை காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர் களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜமுனாராணி கோபித்து கொண்டு தனது 3 மாத பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டு விட்டு மற்ற 2 குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டார். இதனால் மனைவி மீது கண்மணிராஜன் ஆத்திரம் அடைந்தார். அவர் வீட்டில் இருந்த தனது 3 மாத பெண் குழந்தையை கொலை செய்தார். பின்னர் குழந்தையின் உடலை தனது தோட்டத் தில் புதைத்தார். எதுவும் நடக்காததுபோல் வீட்டுக்கு வந்தார். இன்று காலை ஜமுனாராணி வீடு திரும்பினார். அவர் குழந்தையை எங்கே? என்று கண்மணிராஜனிடம் கேட்டார். அதற்கு அவர் குழந் தையை கொலை செய்து தோட்டத்தில் புதைத்து விட்டேன் என்று கூறி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜமுனாராணி கதறி அழுதார். தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து கம்மாபு-ரம் போலீசுக்கு ஜமுனாராணி தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்தனர். அவர்களுடன் விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன் மற்றும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற னர். அந்த இடத்தை தோண்டி குழந்தையின் உடலை வெளியே எடுத் தனர். இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத் தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்மணி ராஜனை தேடினர். அதே பகுதியில் மறைந்திருந்த கண்மணிராஜனை மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது