ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தன்னுடைய சிறந்த தலைமைப்பண்பால் அவரது அணியை நன்றாக வழிநடத்தி வருகிறார். அணியில் இருக்கும் எந்த வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இவருக்கு தெரிந்துள்ளது. அணியில் பெரிய அளவில் ஸ்டார் வீரர்கள் இல்லை என்றாலும், நன்றாக அணியை வழிநடத்துகிறார். முக்கியமாக கடைசி நேரத்தில் அணிக்குள் வந்து, அணியை சரியாக புரிந்து கொண்டு விளையாடுகிறார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஐபிஎல் தொடரில் இவர்மட்டும்தான் வெளிநாட்டு கேப்டன். ஆனாலும் ரோஹித், ரஹானே, கோஹ்லிக்கு தெரியாத இந்திய பிட்ச் மகிமை இவருக்கு தெரிந்துள்ளது.
Kane Williamson's epic captaincy for SRH gives nightmare to other teams.