குட்கா விவாகாராத்தில் சிபிஐ விசாராணை கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தடையின்றி விற்கப்படுகிறது, சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்பதும் புகார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நீர்த்து போகச் செய்ய தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது; ஆகையால் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது.
Sasikala brother Divakaran is hailing Chief Minister Edappadi Palaniswami and accusing that Dinakaran was power hungry to become the Chief Minister.