நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு அதில் இருப்பது யார், யார் என கண்டுபிடிக்குமாறு கேட்டுள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினை திமுக தொண்டர்கள் மூன்றாம் கலைஞர் என்று அழைத்து வருகிறார்கள். படங்கள் தவிர்த்து தற்போது அரசியலிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் அவர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே என்று ஐடியா கொடுத்தார் உதயநிதி. ஆனால் அவர் பேச்சை கேட்க திரையுலக பிரபலங்கள் தயாராக இல்லை. இந்நிலையில் உதயநிதி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு அதில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் யார், யார் என்று கண்டுபிடிக்குமாறு ரசிகர்களை கேட்டுள்ளார். புகைப்படத்தில் இருப்பது உதயநிதி மற்றும் அருள்நிதி என்று ரசிகர்களும் பதில் அளித்துள்ளனர்.
Actor cum producer Udhayanidhi Stalin has posted a childhood picture of him carrying brother Arulnithi and asked fans to guess them.
#udhayanidhistalin #newmovie #twitter