இன்ப அதிர்ச்சி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக்!

Filmibeat Tamil 2018-04-26

Views 1

இயக்குநர் கௌரவ் நாராயணன், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோருக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நவரச நாயகன் கார்த்திக். இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 'தூங்காநகரம்', 'இப்படை வெல்லும்', 'சிகரம் தொடு' ஆகிய படங்களின் இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசும்போது, "காலேஜ் படிக்கிற காலத்தில் நானே கார்த்திக் சாரை லவ் பண்ணேன். அவர்கிட்ட கட்டிப்பிடிச்சு முத்தம் வாங்கணும்ங்கிறது என்னோட ஆசை" எனச் சொன்னார். உடனே, சிரித்த முகத்தோடு மேடையேறிய நவரச நாயகன் கார்த்திக் கௌரவ் நாராயணனை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இந்த இன்ப அதிர்ச்சியால் கௌரவ் நாராயணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் கௌரவ். விரைவில் அவருடன் படத்தில் இணைவேன் எனவும் கூறியுள்ளார். இதேபோல, காமெடி நடிகர் சதீஷும் கார்த்திக்கிடம் முத்தம் கேட்டார். கார்த்திக் சாருக்கு மேடையேறி வர கஷ்டமா இருக்கும். நானே கீழ வந்து வாங்கிக்கிறேன் என்றார். சற்றும் யோசிக்காமல் மேடையேறி அவருக்கும் முத்தம் கொடுத்தார் கார்த்திக். மேலும் தொடர்ந்து பேசிய சதீஷ், நண்டு ஜெகன் இந்தப் படத்தில் நட்புக்காக இரண்டு சீன்களில் நடிச்சுக் கொடுத்திருக்கார். நடிப்புக்காகன்னா நாங்க ரெண்டு பேருமே இந்த ஃபீல்டுல இருந்திருக்க மாட்டோம்." எனப் பேசி கலகலப்பூட்டினார்.


Suriya, Vishal, Arya, Vijay Antony and Shanthanu were present at the audio launch of Gautham Karthik starred 'Mr.Chandramouli'. Suriya says thanks to introduce his sister Brinda as singer. Actor Karthik kissed Director Gaurav Narayanan and actor Sathish in 'Mr.Chandramouli' audio launch.


#misterchandramouli #arya #suriya #vishal #gauthamkarthik #karthik #audiolaunch

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS