சமந்தா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDSamantha

Filmibeat Tamil 2018-04-28

Views 1

தமிழ், தெலுங்கு திரையுலகில் இன்று டாப் நடிகையாக இருக்கும் சமந்தா திரைக்கு வந்தது தற்செயலாகத்தான். தோழி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்துத்தான் அவருக்கு மாடலிங் வாய்ப்பு வந்தது.
அதைத் தொடர்ந்து விளம்பரங்களில் நடிக்கும்போது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் கண்ணில் பட்டு அவர் இயக்கிய 'மாஸ்கோவின் காவிரி' மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் இந்த பல்லாவரம் பொண்ணு. அதற்குள் இவர் அடுத்ததாக கதாநாயகியாக நடித்த 'பாணா காத்தாடி' படமும் வெளிவந்தது.
படங்களில் நடிப்பது போக, விளம்பரங்கள், கடைத் திறப்பு விழாக்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை 'பிரத்யுஷா டிரஸ்ட்' எனும் அமைப்பின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் பயன்படுத்தி வருகிறார் சம்மு.
துரத்தித் துரத்திக் காதல் உணர்த்தும் நாயகன் நானியிடம் நேரடியாகக் காதலைத் தெரியப்படுத்தாமல் அவர் இருக்கும்போது தவிர்த்தலும், இல்லாதபோது ஏங்குவதுமாகத் தன் காதலைத் தெரிவித்திருப்பார். சுதீப்பை காணும்போதெல்லாம் பயத்தோடு கடந்தபடியும், நானியைக் காதலோடு நாணியபடி கடந்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் சமந்தா.
சம்முவின் உண்மையான பெயர் யசோதா. சமந்தா எனும் பெயருக்கான பொருள் - 'கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார்' என்பதாகும். ஆதரவற்றோருக்கு உதவுவதில் மிகுந்த விருப்பம் கொண்ட சமந்தா விளம்பரங்கள் மற்றும் திறப்பு விழாக்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை 'பிரத்யுஷா டிரஸ்ட்' எனும் அமைப்பின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் மருத்துவ செலவுக்குப் பயன்படுத்தி வருகிறார். ஆம், கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார். இன்று போல் எப்போதும் வாழ்ந்திருங்கள் சம்மு!


Samantha is the one of the top actress in Tamil and Telugu cinema. A modeling opportunity came from a photograph taken by a friend's birthday party.

#samantha #birthday #special #trending

Share This Video


Download

  
Report form