ஹிட்டாகும் என்று நினைத்த படம் ஓடாததால் வீட்டிற்குள்ளேயே முடங்கியதாக நடிகை அமிரா தஸ்துர் தெரிவித்துள்ளார். இஷாக் இந்தி படம் மூலம் நடிகையானார் அமிரா தஸ்துர். முதல் படம் ஓடாத நிலையில் தனுஷுடன் சேர்ந்து அனேகன் படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த மிஸ்டர் எக்ஸ் இந்தி படம் பிளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு இந்தி படங்களும் ஓடாமல் போனதால் வேதனை அடைந்தார் அமிரா. பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் அமிரா கூறியதாவது, இஷாக் படம் ஓடாத போதிலும் நான் நல்ல நடிகை என்று அனைவரும் தெரிவித்தனர். அதனால் எனக்கு அப்போது வருத்தம் இல்லை. நடிப்போ, மாடலிங்கோ தொடர்ந்து வேலை செய்தால் போதும் எனக்கு. பாக்ஸ் ஆபீஸ் வசூல் பற்றிய எதிர்பார்ப்பை ஓரங்கட்டிவிட்டேன்.
Actress Amyra Dastur said that she doesn't have any regrets about acted in 'Mr X' which went without a trace at the box office.
#amyradastur #dhanush #heroine