நீதிக்கு தண்டனை படம் எடுத்ததற்காக ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து நான் மிரட்டப்பட்டேன் என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறினார்.
70 படங்கள் இயக்கியுள்ள எஸ்ஏ சந்திரசேகரன், இப்போது ட்ராபிக் ராமசாமி படத்தில் நடித்து வருகிறார். அவரிடம் உதவியாளராக இருந்த விக்கி என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டுக்கு வந்திருந்த எஸ்ஏசி, படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார்.
என்னை அவர் ஒரு இயக்குநராகவே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழில் யாருமே இயக்குநர்கள் இல்லை என்பது அவர் கருத்து. அவர் ஹாலிவுட் ஃபீலில்தான் என்னிடம் வேலை செய்து வந்தார்.