ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆஜராகியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய திவாகரன், அப்போலோ மருத்துவமனை அறிவிப்பதற்கு முதல்நாளே, அதாவது டிச.4-ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.