அஜித் பிறந்தநாளுக்கு பிரபல நடிகரின் மனைவி செய்த சூப்பர் கேக்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-03

Views 319

விவேகம் படத்தில் நடித்த பாரீஸை சேர்ந்த நடிகர் செர்ஜி க்ரோசானின் மனைவி அஜித்

பிறந்தநாளையொட்டி அழகான கேக் செய்துள்ளார்.

அஜித்தின் 47வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவர் ஊரில் இல்லாததால் அவரை பார்க்க

முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அஜித்தின் பிறந்தநாள் அன்று நலத்திட்ட

உதவிகள், அன்னதானம் செய்து அமர்க்களப்படுத்திவிட்டனர் ரசிகர்கள்.

விவேகம் படத்தில் அஜித்தின் டீமில் ஒருவராக நடித்தவர் பாரீஸை சேர்ந்த செர்ஜி க்ரோசான். அஜித்

பிறந்தநாள் அன்று விவேகம் பட ஸ்டில்லை வைத்து அவரின் மனைவி அழகிய கேக் ஒன்றை

செய்துள்ளார். அந்த கேக்கை புகைப்படம் எடுத்து ட்வீட்டி அஜித்தை வாழ்த்தினார் செர்ஜி.

வெளிநாட்டுக்கார நடிகரின் மனைவி தல என்று எழுதி அஜித்தின் விவேகம் ஸ்டில்லை வைத்து கேக்

செய்ததை பார்த்த தல ரசிகர்கள் நெகிழ்ந்துவிட்டனர். உடனே அந்த கேக் புகைப்படத்தை ஷேர் செய்து

வைரலாக்கிவிட்டனர்.

செர்ஜியின் அன்பை பார்த்த அஜித் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளனர். அவர்

மனைவி செய்த கேக் அருமை என்றும் பாராட்டியுள்ளனர்.


Serge Crozon who acted in Vivegam has wished Ajith a happy birthday on

twitter with the picture of a lovely cake made by his wife for thala.

#ajith #birthday #cake

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS