நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் அங்குதான் எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்துக்கு இன்னும் கோபத்தை கொடுத்தது.
SC has revoked the Madras High court order to cancelled the CBSE's order on NEET exam centres in Other States.