தமிழகத்தில் இடி மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே கோடைக்காலத்தின் உச்சபட்ச வெப்பம் தகிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது.