ஜி.வி. பிரகாஷை பற்றி ஐங்கரன் இயக்குனர் பேட்டி!- வீடியோ

Filmibeat Tamil 2018-05-03

Views 1.3K

நடிகர் தனுஷுக்கு பொல்லாதவன் படம் திருப்புமுனையாக அமைந்தது போல், நடிகர்

ஜி.வி.பிரகாஷுக்கு ஐங்கரன் படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என ஒன்இந்தியா தமிழ்

இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அப்படத்தின் இயக்குனர் ரவிஅரசு தெரிவித்துள்ளார்.

நடிகர் அதர்வாவை வைத்து ஈட்டி என்ற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ரவிஅரசு. இவர்

தற்போது, ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக வைத்து, ஐங்கரன் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

ஐங்கரன் - எப்போ ரிலீஸ்? ஒரு பாடல் காட்சி மட்டும் தான் பாக்கி. மற்ற எல்லா காட்சிகளும்

முடிந்துவிட்டது. எடிட்டிங் பணியில் பெரும்பாதி முடிவடைந்துவிட்டது. பாடல் காட்சிக்காக அடுத்த

வாரம் கோவா செல்ல இருக்கிறோம். அது முடிந்துவிட்டால், ஜூலை மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய

முடிவு செய்துள்ளோம். ஹீரோயின் மஹிமா பத்திச் சொல்லுங்க? இந்தப் படத்துல ஜி.வி.க்கு ஜோடியா

மஹிமா நடிச்சிருக்காங்க. ரொம்ப டெடிக்கெட்டட் ஆர்டிஸ்ட். அவுங்களுக்கும் இந்த படம்

திருப்புமுனையா அமையும். ஈட்டி படத்துல கிளான்ட்ஸ்மேன் திராம்பஸ்தேனியா என்ற ஒரு புது

நோயை அறிமுகப்படுத்துனிங்க... இந்த படத்துல என்ன புதுசு? (சிரிக்கிறார்)... இந்த படத்தைப்

பொறுத்தவரைக்கும் திரைக்கதையில வித்தியாசமான முயற்சிகள் பண்ணியிருக்கோம். இரண்டாம்

பாதி முழுவதும் லைவ் லொக்கேஷன்ஸ்ல தான் எடுத்திருக்கோம். ஆடியன்சுக்கு அது புது அனுபவமா

இருக்கும். மத்தபடி, டெக்னிக்கலாவும் படம் சவுண்டா இருக்கும்.

Actor G.V.Prakash starrer Ayngaran movie's director Raviarasu is confident

that the movie will take G.V.P. to next level.

#ayngaran #gvprakash #director #raviarasu #interview

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS