ஈரோடு: ரயில்வே பள்ளிகளை மூடும் முடிவை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்னக ரயில்வே சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் செயல்படும் 9 பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும், அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளை மூட வேண்டும் என்று கடந்த 30 ம் தேதி ரயில்வேதுறை உத்தரவிட்டது. ரயில்வேயின் இந்த உத்தரவு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.