ரஜினி பேரன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அனிருத், தனுஷ்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-07

Views 20.5K


இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்த பிறகு பெற்றோருடன் தங்கியுள்ளார். அவரின் மகன் வேத் கிருஷ்ணாவின் 3வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அமெரிக்கா சென்றிருந்த தாத்தா ரஜினி பேரனின் பிறந்தநாளுக்கு சரியாக ஊர் திரும்பியுள்ளார். வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷ் வேத் கிருஷ்ணாவுடன் செல்லம் கொஞ்சும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குட்டிப் பையனுக்கு பஸ் வடிவில் கேக் செய்து வைத்திருந்தனர். பேரன் கேக் மீதிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததை தாத்தா பார்த்து
மகிழ்ந்துள்ளார். தங்கச்சி மகனை ஐஸ்வர்யா தனுஷ் தூக்கி வைத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. மகனின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் வைத்திருந்த சவுந்தர்யா தற்போது காண்பித்துள்ளார்.


Rajinikanth's grandson and Soundarya Rajinikanth's son Ved Krishna celebrated his 3rd birthday yesterday. Soundarya Rajiikanth have posted pictures of ved with Dhanush and sister Aishwarya Dhanush holding and
adoring her son. She has also posted pictures from the birthday party of Anirudh with her mother Latha Rajinikanth with her son. Rajinikanth is seen
with his grandson who is cutting the cake in a picture.

#rajinikanth #grandson #birthday #dhanush #vedkrishna

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS