மதுரவாயலில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து பெண் தவறி விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆவடி, பக்தவச்சலபுரம், பிரகாசம் தெருவை சேர்ந்தவர் ரவி (45). ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி (43).