பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபடபோவதாக அறிவித்திருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை வீடுகளில் தூங்கி கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பல நிர்வாகிகளை கைது செய்ய அவர்களது வீடுகளுக்கு போலீசார் சென்றதால் அவர்கள் வேறு இடங்களுக்கு சென்றனர்.
பணிக்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என்பதால் பல நிர்வாகிகள் அரசு அலுவலக பணிகளை புறக்கணித்தனர். கைது செய்தாலும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.