காலா இசை வெளியீட்டு விழா - வீடியோ

Filmibeat Tamil 2018-05-08

Views 5

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'காலா' படத்தின்

பாடல்கள் வெளியீட்டு விழா நாளை மறுநாள் ( மே 9 ) அன்று நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் உருவான விதம் பற்றி விவரித்துள்ளனர் இசையமைப்பாளர்

சந்தோஷ் நாராயணனும் இயக்குநர் பா.ரஞ்சித்தும். எட்டு பாடல்கள் + ஒரு Acapella வெர்சன்

ஆகியவை இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.

'காலா' படத்தின் ஒவ்வொரு பாடல்களும் உருவான விதம் பற்றி இருவரும் பேசியுள்ளனர். பாடல்களின்

சில வரிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்

காத்திருக்கிறது.

1. போராடுவோம் - "நிலம் நீர் எங்கள் உரிமை.." எனும் வரிகளோட தொடங்கும் பாட்டு. இன்னிக்கு

இருக்கிற காலகட்டத்துக்கு ரொம்ப தொடர்புடைய பாட்டு. காலா போன்ற அரசியல் தத்துவ படத்துல

இந்த மாதிரி நல்ல விஷயங்களை பண்ணனும்னு நெனைச்சோம்.
2. நிக்கல் நிக்கல் - கெளம்பு கெளம்பு விடிஞ்சுபோச்சு கெளம்பு கெளம்புனு ஆரம்பிக்கும். ஒருத்தரை

பெருசா உயர்த்தி காட்ட உருவாக்கப்படும் பாடல். 'பொதுவாக எம்மனசு தங்கம்' சூப்பர்ஹிட் பாடல்

மாதிரியான பாட்டா இருக்கும்.

3. கண்ணம்மா.. - காலா படத்தோட மொத்த உயிர் கண்ணம்மா பாட்டுல இருக்கணும்னு பிளான்

பண்ணினோம். கம்ப்யூட்டரை தொடாமலேயே முழுக்க முழுக்க பியானோவை வெச்சே இந்தப்

பாட்டை முடிக்கணும்னு முடிவு பண்ணினோம். மெலோடி வரிசையில் இது என்னோட ஃபேவரிட் சாங்

எனத் தெரிவித்துள்ளார் சந்தோஷ்.
4. கண்ணம்மா பாடலை பிரதீப் பாட கண்ணம்மா பாடலின் Acapella வெர்சனை அனந்து

பாடியிருக்கிறார்.
5. தெருவிளக்கு வெளிச்சத்துல - இந்தப் பாடலோட வரிகளை ரெண்டுவாட்டி கேட்டாலே நம்மளால

முழுசா பாட முடியும். படம் முடியும் நேரத்தில் இந்தப் பாடலைப் பயன்படுத்தி இருக்கோம்.
6. நிலமே எங்க உரிமை - படத்தில் இது முக்கியமான அரசியலைப் பேசும் பாடலாக இருக்கும்.
7. தங்க செல - படத்தில் மிகவும் கொண்டாட்டமான பாடல். ரஜினி, ஈஸ்வரி ராவ் குடும்பத்தினர்

எல்லோரும் சேர்ந்து இந்தப் பாடலின் விஷுவலில் இருப்பார்கள்.
8. கற்றவை பற்றவை - விஷுவல்ஸை வெச்சுக்கிட்டு உருவாக்கின பாடல் தான் 'கற்றவை பற்றவை'.

அதன் எனர்ஜி லெவல் செம்மயா இருந்ததால டீசர்ல அதை பயன்படுத்தினோம்.
9. செம்ம வெய்ட்டு - குப்பத்துப் பகுதியில் இருக்கிற மக்களோட வாழ்க்கையை எப்படி

பார்க்கலாம்ங்கிறதுக்கு அடையாளம் இந்தப் பாடல்.

Kaala Audio Launch is happening tomorrow. Rajinikanth Dhanush , and other

VIPs are attending this launch celebration. The songs are wonderful and

nice. Here is the little introuduction or review about the song.
Music director Santhosh Narayanan and Director Pa.Ranjith talks about

'Kaala' songs'. Kaala album preview is here..

#kaala #audioteaser #audio #songs #teaser

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS