பெண் ஒருவரை கடிக்க முயன்று தப்பி ஓடிய பாம்பு, மூன்று மாதங்களுக்கு பின் கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருபுவனை அடுத்துள்ள கிராமம் கொத்தபுரிநத்தம். இங்கு வசித்து வசித்து வருபவர்கள் கிருஷ்ணன்-மனைவி தம்பதி. 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டனர். அதற்காக லாரியில் கருங்கற்களையும் விலைக்கு வாங்கினர். கருங்கற்களுடன் வந்த லாரியானது வீடு கட்டப்போகும் இடத்தில் வந்து நின்றது. பின்னர் லாரியிலிருந்து கருங்கற்களை கொட்டும் பணி ஆரம்பித்தது. இதனை லாரி அருகே நின்றுகொண்டு மாரியம்மாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.