கோவை உக்கடம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது மோதியதில் அவரது தலை பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உக்கடம் அருகே லாரிபேட்டை என்னுமிடத்தில் பொள்ளாச்சி நோக்கி தனியார் பேருந்து அதிவேகமாக நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்னே இரு சக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரு சக்கரத்தின் பின்பகுதியில் ஆஜிரா பீவி என்ற சமையல் வேலை செய்யும் பெண் அமர்ந்திருந்தார். வேகமாக வந்த பேருந்து இரு சக்கரவாகனத்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில் ஆஜிராபீவி நிலைதடுமாறி கீழே விழுந்ததுடன், பேருந்தின் சக்கரத்தில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.