தமிழறிஞர் அறிவொளி காலமானார், அவருக்கு வயது 80. தமிழறிஞர் அறிவொளி நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்தவர். 1986ல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு திருச்சி மருத்துவமனையில் தமிழறிஞர் அறிவொளியின் உயிர் பிரிந்தது.