'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் படத்திற்கு திரையுலகினர் மத்தியிலேயே எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.
இயக்குநர் பாரதிராஜா, விஜய் மில்டன் ஆகியோர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தைக் கடுமையாகச் சாடியிருந்தனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இந்தப் படத்தை உடனடியாக தடை செய்யவேண்டும் என வலியுறுத்தி நீண்ட கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திருநங்கைகள் இப்படத்தில் தங்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் கூறி போலீஸில் புகார் அளித்துள்ளனர். சென்னை தோஸ்த் என்ற அமைப்பைச் சேர்ந்த அப்சரா மற்றும் சாரா ஆகிய திருநங்கைகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Many of cinema personalities opposes 'Iruttu araiyil murattu kuththu' Adult film. Transgenders Apsara and Sarah have filed a complaint against the film. Memes creators are making fun of Gautham Karthik starrer IAMK that hit the screens last friday.
#iruttuaraiyilmurattukuthu #lgbt #sara #upsara #memes