செடி நடுவதற்கு குழி தோன்றிய போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த துரை என்பவரது வீட்டில் தோட்ட வேலையில் சதீஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் வீட்டின் முன் செடிகளை நடுவதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது கடப்பாறை பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மின் கேபிளில் எதிர்பாராத விதமாக பட்டுள்ளது,. இதனால் மின்சாரம் தாக்கியதில் சதீஷ் பலத்த சத்தத்துடன் தூக்கி வீசப்பட்டுள்ளார். சதீஷின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த மணியம்மாள் என்பவர் வந்து மின்சாரம் தாக்கிய சதீஷை காப்பற்ற சென்றபோது அவரும் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இருவரையும் மீட்ட அப்பகுதியினர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தானர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.