des:நவக்கிரக நாயகர்கள் சாப விமோசனம் பெற அருளிய, திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரையும், மங்களாம்பிகையையும் வெள்ளிக்கிழமையான இன்று தரிசனம் செய்யலாம். இது மாங்கல்ய தோஷம் நீக்கும் பரிகார தலமாகும். குஷ்ட ரோக நிவர்த்தி தலமும் ஆகும். கும்பகோணத்தை சுற்றிலும் நவகிரக தலங்கள் உள்ளன. சூரியனார் கோவிலில் இருந்து நவகிரக தலங்களை தரிசிக்கும் முன்பு திருமங்கலங்குடி சென்று அங்குள்ள பிராணநாதேஸ்வரரை தரிசிக்கலாம். தீர்க்க சுமங்கலி பவ என்று திருமணம் செய்த பெண்ணை பெரியோர்கள் வாழ்த்துவார்கள். ஒரு பெண்ணின் மாங்கல்ய பலம் அந்த பெண்ணின் கணவனை காக்கும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமண தடை ஏற்படும்.