ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் செயல்படாமல் உள்ள ஊரக பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறநகர் பேருந்து நிலையம் கேட்டால், ஊரக பேருந்து நிலையம் கிடைத்ததாகவும், அதுவும் தற்போது செயல்படாமல் உள்ளதாகவும் பகுதி மக்கள் புலம்புகின்றனர்.