இப்படியும் ஒரு கணவரா என வியவைக்கும் நடிகர் - வீடியோ

Filmibeat Tamil 2018-05-17

Views 5

மனைவிக்காக ஜெயசூர்யா செய்த காரியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
மலையாள நடிகர் ஜெயசூர்யா ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஞான் மேரிக்குட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் திருநங்கையாக நடிக்கிறார்.
திருநங்கை கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவு அம்சமாக பொருந்தியுள்ளது.
ஜெயசூர்யாவின் ஆடை வடிவமைப்பாளராக அவரின் மனைவி சரிதா உள்ளார். சரிதா கொச்சியில் ஒரு பொட்டிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவியின் கடை விளம்பரத்திற்கு மாடலாக மாறியுள்ளார் ஜெயசூர்யா.
மனைவியின் கடை விளம்பரத்திற்கு திருநங்கை வேடத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெயசூர்யா. அந்த விளம்பர பேனர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேனர் புகைப்படத்தை ஞான் மேரிக்குட்டி இயக்குனர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனைவியின் கடைக்கும், தனது படத்திற்கும் ஒரே நேரத்தில் விளம்பரம் தேடிவிட்டார்.


Malayalam actor Jayasurya has turned model for his wife Sarith's boutique.

#jayasurya #mollywood #sarithboutique #njanmerikutty

Share This Video


Download

  
Report form