கோவையில் புதுப்பிக்கப்பட்ட காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். கோவை ரயில் நிலையம் எதிரே, எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல்துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது. இதில், 16 அறைகள், டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம், சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன.