கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. முன்னதாக எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா. எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் நீதிபதிகள் அசோக் பூஷண், பாப்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Yeddyurappa’s floor test tomorrow, Supreme Court orders floor test for Yeddyurappa government in Karnataka tomorrow , karnataka election