ட்விட்டரில் நயன்தாராவுக்கு ப்ரபோஸ் செய்த விக்னேஷ் சிவன்- வீடியோ

Filmibeat Tamil 2018-05-18

Views 3

இது தான் சாக்கு என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார்.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். திடீர் திடீர் என்று ஜோடியாக

அமெரிக்கா பறந்துவிடுகிறார்கள். அங்கு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு

சிங்கிள்ஸ்களின் சாபத்தை வாங்குகிறார்கள்.

அவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் கல்யாண வயசு பாடல் வீடியோவை நேற்று

வெளியிட்டார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விக்கி நயன்தாராவுக்கு ப்ரொபோஸ் செய்துவிட்டார்.
நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்து டி , வெயிட் பண்ணவா#kolamaavukokila #nayanthara. சரியான
பாடலை அளித்த அனிருத், சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் விக்னேஷ்

சிவன்.
சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளை வைத்து நயன்தாராவிடம் கட்டிக்கிறியா, இல்லையா என்று கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா என்ன பதில் அளிக்கப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கல்யாண வயசு பாட்டில் நயன்தாராவை சைட்டு அடிக்கும் யோகி பாபு மீது கடுப்பில் இருக்கிறார் விக்கி. இது குறித்து அவர் ட்வீட்டியதை பார்த்த சிங்கிள்ஸ் நெட்டிசன்கள் நீங்கள் நயன்தாராவை கரெக்ட் செய்தபோது எங்களுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.



Director Vignesh Shivan has proposed to his alleged girlfriend Nayanthara on instagram

using her upcoming movie song line.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS