கோவையில் வழக்கறிஞர் வீட்டில் ஆட்டைய போட முயன்ற கொள்ளையர்-வீடியோ

Oneindia Tamil 2018-05-22

Views 1.1K

கோவை அடுத்த சோமனூரில் பெண் வழக்கறிஞர் வீட்டில் இளைஞர்கள் இருவர் திருட முயற்சிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியதை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோமனூர் ரயில்வே பாலத்தின் அருகில் வசித்து வரும் மில் உரிமையாளரான பழனிச்சாமி, அவரது மனைவி, வழக்கறிஞராக பணியாற்றி வரும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, நள்ளிரவு, ஜன்னல் வழியாக வீட்டினுள் உள்ளவற்றை நோட்டமிட்ட மர்மநபர்கள், பின்னர் கதவை உடைக்க முயற்சித்தனர். இதனால் வெளியில் உறங்கிக்கொண்டு இருந்த பழனிசாமி கதவை உடைக்கும் சப்தம் கேட்டு எழுந்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS