அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த ஜூலியை நடிகை கஸ்தூரி அவருக்கே உரிய பாணியில் கலாய்த்துள்ளார்.
நானும் அரசியலுக்கு வருகிறேன் என்று ஜூலி அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் இரண்டு வீடியோக்கள் வெளியிட்டார். தயவு செய்து அரசியலுக்கு வந்துவிடாதீர்கள் ஜூலி என்று நெட்டிசன்கள் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவரின் ஆதரவாளர்களோ நீ வா தலைவி பார்த்துக்கலாம் என்கிறார்கள்.
நீங்கள் ஜூலியுடன் அரசியலுக்கு வந்தால் உங்களை முதல்வராக்குவோம் என்று அவரது ஆதரவாளர் ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம் தெரிவித்துள்ளனர்.
ஜூலியின் ஆதரவாளர்களின் ட்வீட்டை பார்த்த கஸ்தூரியோ, தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு.... என்று பதில் அளித்துள்ளார்.
தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு....
Actress Kasturi has made fun of Julie who announced that she will make her entry into politics.
#kasthuri #julie #politics #tweet #twitter