ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸ் முன்னேறும் நேரடி வாய்பை அளிக்கும் பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது. இதில் இந்த சீசனில் மிகவும் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்குகின்றது. லீக் ஆட்டங்களில் 18 புள்ளிகளைப் பெற்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்தையும், 18 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
It is CSK or SRH, who is going to first enter the finals of IPL 2018.
#csk
#ipl
#iplplayoff